முதல்வர் கோப்பை போட்டி: தேனிக்கு 16வது இடம்
தேனி: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் ஆக., செப்.,ல் போட்டிகள்நடந்தது. மாநில அளவிலான போட்டிகள் அக்., 2 முதல் 14 வரை சென்னையில் நடந்தது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பிற பிரிவில் இடம் பெற்ற வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றனர். முதல்வர் கோப்பை போட்டிகளில் தேனி மாவட்டம் 16வது இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.