உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி குறுவட்ட ஹாக்கி போட்டி மாணவ, மாணவியர் உற்சாகம்

தேனி குறுவட்ட ஹாக்கி போட்டி மாணவ, மாணவியர் உற்சாகம்

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குறுவட்ட ஹாக்கி போட்டிகளில் 14 மற்றும் 17 வயது ஆண்கள் பிரிவு போட்டிகளில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றன. 19 வயது பிரிவில் வெங்கடாசலபுரம் ஸ்ரீவெங்கிட்ட ரமண மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. தேனி குறுவட்ட போட்டிகள் மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி போட்டி நடந்தது. இதில் 14 வயது ஆண்கள் பிரிவில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, வி.சி.புரம் எஸ்.வி.வி.மேல்நிலைப் பள்ளியும் மோதின. இதில் 5:0 என்ற புள்ளிக்கணக்கில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. 17வயது ஆண்கள் ஹாக்கி போட்டியிலும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி 2:0 என்ற புள்ளிக்கணக்கில் வி.சி.புரம் எஸ்.வி.வி., பள்ளியை வென்றது. 19 வயது ஆண்கள் ஹாக்கி போட்டியில் வி.சி.புரம் எஸ்.வி.வி., பள்ளி, 4:0 என்ற புள்ளிக்கணக்கில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியை வென்றது. 14 வயது பிரிவு போட்டியில் வி.சி.புரம் எஸ்.வி.வி. மேல்நிலைப்பள்ளி 4:0 என்ற புள்ளிக்கணக்கில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியை வென்றது.17 வயது பிரிவு போட்டியில் முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 1:0 என்ற புள்ளிக்கணக்கில் தேனி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியை வென்றது. 19 வயது பிரிவு போட்டியில் வி.சி.புரம் எஸ்.வி.வி., மேல்நிலைப்பள்ளி 5:0 என்ற புள்ளிக்கணக்கில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்உறவின்முறை வித்யாலயா பள்ளியை வென்றது. இதுதவிர நேற்று 6 குறுவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. தேனியில் மேரிமாதா மெட்ரிக்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் ஒருங்கிணைத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !