மேலும் செய்திகள்
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
5 hour(s) ago
ஆண்டிபட்டி, : 'வாக்கோ இந்தியா' கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில் ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் நடந்த தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பங்கேற்ற மாணவர் திரிதேவ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தேசிய போட்டியில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்களில் ஜூனியர் பிரிவில் 16 வயதுக்குட்ட 51 கிலோ எடை குறைவு பிரிவினருக்கான போட்டியில் தேனியைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் வெண்கலப் பதக்கம் வென்றார். இவருக்கான பாராட்டு விழா கன்னியப்பபிள்ளைபட்டியில் நடந்தது. வெண்கலம் வென்ற மாணவரை தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவர் மகாராஜன், செயலாளர் துரைமுருகன், துணை பயிற்சியாளர்கள் நவீன், ஜெயவேல், பா.ஜ., ஆண்டிபட்டி நகர் தலைவர் மனோஜ்குமார் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
5 hour(s) ago