உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாக்கடை துார்வாராததால் குளமாக மாறிய தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்

சாக்கடை துார்வாராததால் குளமாக மாறிய தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்

தேனி: தேனியில் சாக்கடை துார்வாராததால் நேற்று மழை பெய்த போது பல இடங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து மழைநீரும் குளம் போல் தேங்கியது. தேனி நகர்பகுதியில் பல இடங்களில் சாக்கடைகள் துார்வாராமல் குப்பை, மண் நிறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் அரைமணிநேரத்திற்கு மேல் தேனியில் மழை பெய்தது. சாக்கடைகளில் மழைநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கியது. தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் நேருசிலை பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு பகுதிகளில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் குளம் போல் தேங்கியது. இதே நிலை பாரஸ்ட் ரோடு 5, 6வது தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெரு உள்ளிட்ட இடங்களிலும் நீடித்தது.நகர்பகுதியில் சாக்கடைகளை துார்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ