உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தெருக்களில் பாலம் அமைப்பதால் ராஜவாய்க்காலில் நீர் திறப்பு  இல்லை 

தெருக்களில் பாலம் அமைப்பதால் ராஜவாய்க்காலில் நீர் திறப்பு  இல்லை 

தேனி: தேனி நகராட்சி நிர்வாகம் ராஜவாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி மேற்கொண்டுள்ளதால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை என நீர்வளத்துறையினர் தெரிவித்தனர். தேனி நகரின் மையப்பகுதியில் ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் கொட்டக்குடி ஆற்றில் உருவாகி 2.47கி.மீ., துாரத்தில் மதுரை ரோட்டில் உள்ள ராஜாகுளம் கண்மாயில் கலக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராஜவாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டன. ஆனாலும், ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை. நீர்வழிப்பாதை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழைகாலங்களில் குளமாகின்றன. கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் செல்லும் போது ராஜவாய்காலில் தண்ணீர் செல்ல வகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் திறக்காதது பற்றி நீர்வளத்துறையினரிடம் கேட்ட போது, 'ராஜவாய்க்காலில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கப் பட்டது. தொடர்ந்து பழைய பஸ் ஸ்டாண்டில் வாய்க்காலில் நகராட்சி சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.தற்போது ஐந்து இடங்களில் பாலங்கள் அமைத்து வருகின்றனர். இதனால் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை. பாலங்கள்அமைக்கும் பணி முடிந்த பின் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்