மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
18-Oct-2024
பெரியகுளம் : பெரியகுளம் அருகே மேலகாமக்காப்பட்டி நடுத்தெரு யோகேஷ் 23. திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்கு மேலக்காமக்காபட்டி- சக்கரைப்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். வடபுதுப்பட்டியைச் சேர்ந்த இவரது நண்பர் விக்ரமும் இவருடன் நடந்து சென்றார். அப்போது கைலாசபட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி 28 இவரது நண்பர்கள் சிவானந்தன், விருமாண்டிஆகியோர் யோகேஷை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்ததால் யோகேஷை, சிவானந்தன், விருமாண்டி பிடித்துக் கொள்ள அலெக்ஸ்பாண்டி அரிவாளால் கையில் வெட்டினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு யோகேஷ் கொண்டு செல்லப்பட்டார். தென்கரை எஸ்.ஐ., செந்தில் குமார், அலெக்ஸ் பாண்டியை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகிறார்.
18-Oct-2024