மேலும் செய்திகள்
நாய்களால் அச்சம்
26-Apr-2025
சிறுமிக்கு தொந்தரவு சிறுவன் மீது 'போக்சோ'
19-May-2025
தேனி: தேனி சிவராம்நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் மே 18ல் சமதர்மபுரம் இறைச்சிக் கடை அருகே விளையாடினான். சிறுவன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். மறுநாள் காலை சிறுவன் உடலில் காயங்களுடன் வீடு திரும்பினார். பெற்றோர் விசாரிக்கையில், சிறுவன், சமதர்மபுரம் விக்னேஷ் 33, அலைபேசியை திருடிவிட்டதாக கூறி, இறைச்சிக்கடைக்கு அழைத்து சென்றார். அங்கு மூன்று பேர் அலைபேசியை கேட்டு தாக்கி இரவு முழுவதும் இறைச்சி கடையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர் என்றார். சிறுவனின் தாயார் புகாரில், தேனி போலீசார் விசாரித்து சிறுவனை தாக்கியதாக விக்னேஷ், அல்லிநகரம் ஹரிபிரசாத் 21, இறைச்சி கடை உரிமையாளர் ஜெகதீஸ் 38, ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கிறார்.
26-Apr-2025
19-May-2025