உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற மூவர் கைது

மாணவர்களுக்கு  கஞ்சா விற்ற மூவர் கைது

தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சதீஸ்குமார் தலைமையிலான போலீசார் போடி தீர்த்தத்தொட்டி முருகன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அங்கு துரைசாமிபுரம் காலனி மாதவன் 27, அதேப்பகுதி முத்துக்குமார் 25 ஆகியோர் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். போலீசார் விசாரணையின் மாதவன் 60 கிராம் கஞ்சா வைத்திருந்தார். இவர் துரைராமிபுரம் காலனி தர்மாவிடம் கஞ்சா வாங்கி, கோடாங்கிபட்டி, போடி பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். தர்மாவை கைது செய்து 30 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அவரிடம் விசாரித்ததில் ஆந்திரா நபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ