கார் விபத்து மூவர் காயம்
போடி : போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெருவில் வசிப்பவர் சுபாஷ் 29. இவர் நேற்று காரில் தேவாரம் சென்று விட்டு போடி நோக்கி வந்துள்ளார். அதிவேகமாக காரை ஓட்டி வந்ததில் போடி ஆர்.எம்.டி.சி., டெப்போ அருகே உள்ள சென்டர் மீடியனில் மோதி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. பின் சீட்டில் அமர்ந்து இருந்த தோப்புப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் 28. போடி ஒட்ட கூத்தார் தெருவை சேர்ந்தவர் சூர்யா 25., திருமலாபுரத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் 25. மூவரும் பலத்த காயம் அடைந்தனர். மூவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போடி டவுன் போலீசார் கார் டிரைவர் சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.