மேலும் செய்திகள்
வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறு மக்கள் அச்சம்
18-Sep-2025
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை புலி தாக்கி கொன்றது. அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலமுருகனுக்கு சொந்தமான பசு நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றது. மாலையில் வீடு திரும்பாததால், அதனை பாலமுருகன் தேடிச் சென்றார். அப்போது தேயிலை தோட்ட எண் 23ல் பசுவை கொன்று, அதன் இறைச்சியை புலி தின்று கொண்டிருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், அச்சத்தில் வீடு திரும்பினார். வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தேயிலை தோட்ட எண் 14ல் செப்.16ல் தொழிலாளர்கள் சிறுத்தையை நேரில் பார்த்த நிலையில் ஆறு நாட்கள் இடைவெளியில் புலி பசுவை கொன்ற சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
18-Sep-2025