மாணவர் விடுதியில் விழும் டைல்ஸ் கற்கள்
ஆண்டிபட்டி : ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிற்பட்ட மாணவர்களுக்கான அரசு விடுதி செயல்படுகிறது. பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட விடுதி கட்டிடத்தின் முன்பக்க சுவரில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் பெயர்ந்து நடைபாதையில் அடிக்கடி விழுகிறது. மாணவர்கள் நடந்து செல்லும் போது கற்கள் விழுந்தால் ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்த விடுதி நிர்வாகத்தினர் சாய்வு தள நடைபாதையில் மாணவர்கள் நடப்பதற்கு தடை விதித்து முட்களால் அடைத்துள்ளனர். சேதம் அடைந்து வரும் கட்டிடத்தை சீரமைக்க பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.