உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தற்கொலைக்கு முயன்ற சுற்றுலா வழிகாட்டிகள்

தற்கொலைக்கு முயன்ற சுற்றுலா வழிகாட்டிகள்

மூணாறு : மூணாறு அருகே வட்டவடை கிராமத்தை சேர்ந்தவர்கள் அருண்பாண்டியன் 21, கருப்பசாமி 23. சுற்றுலா வழிகாட்டிகளான இருவரும் கடந்த சில தினங்களாக மது போதையில் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் காலியாக உள்ள வீட்டினுள் இருவரும் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அருண்பாண்டியனும், இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கருப்ப சாமியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை