கொடைக்கானல் சென்ற சுற்றுலா பயணிகளை சிறுத்தை விரட்டியதால்... அச்சம்: ஆடு,மாடுகளை ேவட்டையாடுவதால் கிராம மக்கள் பீதி
தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி காமக்காபட்டி ரோடு பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் பகுதியில் ராஜா என்பவரது தென்னந்தோப்பில் ஜெயக்குமார் என்பவர் 200 ஆட்டுகிடை அமைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஆட்டுக்கிடையில் புகுந்த சிறுத்தை 5 ஆடுகளை கடித்து கொன்றது. இதன் பின் காமக்காபட்டி கொடைக்கானல்ரோட்டில் தங்கப்பாண்டி என்பவரின் வீட்டிற்கு வெளியில் கட்டியிருந்த ஆடு, முருகன் என்பவரது மாடு, பரசு என்பவரது கன்றுக்குட்டி, மொக்கை என்பவரது தோட்டத்தில் இருந்த நாய் என 5 மாதத்தில் ஆடுகள், மாடுகள், கன்றுக்குட்டிகள், நாய்கள் என 50 க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடியது. கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளான 18ம் படி கருப்பசாமி கோயில் பகுதி, கொடைக்கானல் மலை அடிவாரம் டம்டம்பாறை வழியில் புலிப்புடவு, காப்புக்காடு பகுதியில் இரண்டு கூண்டு, புஷ்பராணி நகரில் ஒன்று என நான்கு கூண்டுகள் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஓரிரு நாட்களில் சிறுத்தை சிக்கும். இரவில் செல்ல மக்கள் தயங்குகின்றனர். உயிர்பலியாகும் முன் பிடிக்க வேண்டும் ராமர், பேரூராட்சி கவுன்சிலர், கெங்குவார்பட்டி: சிறுத்தை நடமாட்டத்தால் தென்னந்தோப்பில் இரவு காவலர்கள் செல்ல அச்சப்படுகின்றனர். காமக்காபட்டி செக் போஸ்டிலிருந்து கொடைக்கானல் செல்வதற்கு 50 கி.மீ., தூரம். தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள், டூவீலரில் செல்கின்றனர். கடந்த வாரம் மதுரையிலிருந்து டூவீலரில் சென்ற இருவரை புலிப்புடவு காப்புக்காடு பகுதியில் செல்லும் போது சிறுத்தை விரட்டியது. நல்ல வேளையாக அடுத்தடுத்து கனரக வாகனங்கள் சென்றதால் சிறுத்தை புதருக்குள் ஓடியது. பெரியகுளம் வனத்துறையினரிடம் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. சிறுத்தையை பிடிக்க ஒவ்வொரு கூண்டிற்கும் ஒரு ஆடு வீதம் நான்கு ஆடுகள் இலவசமாக வனத்துறைக்கு வழங்க தயாராக உள்ளோம். கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உயிர்பலி ஏற்படுவதற்குள் சிறுத்தையை பிடிக்க வேண்டும்.-