உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  டவுன் பஸ் பஞ்சர்: மலைப் பாதையில் விபத்து தவிர்ப்பு

 டவுன் பஸ் பஞ்சர்: மலைப் பாதையில் விபத்து தவிர்ப்பு

கூடலுார்: கூடலுாரில் அரசு டவுன் பஸ் முன் டயர் 'பஞ்சர்' ஆனதால் பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பப்பட்டனர். இதனால் குமுளி மலைப் பாதையில் விபத்து தவிர்க்கப்பட்டது. குமுளியில் இருந்து கம்பம் நோக்கி நேற்று முன்தினம் பகலில் பயணிகளை ஏற்றி வந்த டவுன் பஸ்சின் டயர் கூடலுார் காய்கறி மார்க்கெட் முன் பஞ்சரானது. பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பப்பட்டனர். குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரை 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். மலைப் பாதையில் வரும் போது டயர் பஞ்சர் ஆகியிருந்தால் 200 அடிக்கு மேல் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். அதனால் ஆபத்து நிறைந்த மலைப் பாதையில் இயக்கப்படும் டவுன் பஸ்களை தினந்தோறும் சோதனை செய்து இயக்குவதுடன், அதிகமாக தேய்ந்த நிலையில் உள்ள டயர்களை மாற்றி, புதிய டயர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி