உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

கூடலுார்: கூடலுார் அருகே உழவு செய்து கொண்டிருந்த டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார். கூடலுார் அருகே ஆங்கூர்பாளையம் விலக்கில் ஐயப்பன் என்பவரின் தென்னந்தோப்பில் நேற்று மதியம் உழவு செய்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் புதுப்பட்டியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சந்தோஷ்குமார் 27, உடல் நசுங்கி பலியானார். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளது. இதுகுறித்து கூடலுார் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை