உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செம்மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

செம்மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி எஸ்.ஐ., பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு டி.சுப்புலாபுரம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதி ஓடையில் இருந்து செம்மண் அள்ளிக்கொண்டு வந்த இரு டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். செம்மண் கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டு இல்லை. விசாரித்துக் கொண்டிருந்தபோது டிராக்டர்களை ஓட்டி வந்தவர்கள் அங்கிருந்து ஓடினர். செம்மண்ணுடன் டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் டி.சுப்புலாபுரம் முத்துக்குமார் 28, ஆனந்த் 27, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை