உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தை வளாகம் சுகாதார சீர்கேட்டால் வியாபாரிகள், பொது மக்கள் தவிப்பு

அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தை வளாகம் சுகாதார சீர்கேட்டால் வியாபாரிகள், பொது மக்கள் தவிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதி இன்றி பொது மக்கள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். ஆண்டிபட்டி வாரச்சந்தை 70 ஆண்டுகளை கடந்து செயல்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும் இந்த வாரச் சந்தையில் தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைக்கின்றனர். காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், பலவகை தளவாடப் பொருட்கள், விவசாய பணிகளுக்கான உபகரணங்கள், ஜவுளிகள், தின்பண்டங்கள் உட்பட மக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் வியாபாரிகள் சந்தைப் படுத்துகின்றனர். ஆண்டிபட்டி, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு வாரச்சந்தையில் கூடுகின்றனர். கடந்த காலங்களில் மாட்டு வண்டிகள் மூலம் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்த வியாபாரிகள் தற்போது லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் மூலம் பொருட்களை கொண்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வார சந்தை வளாகத்தில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்காக 11 இடங்களில் மேடையுடன் கூடிய தகர 'ஷெட்'கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. தகர 'ஷெட்'கள் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலையில் மழைநீர் ஒழுகி பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்கிறது. வியாபாரிகள் கூறியதாவது:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி