தி.மு.க.,இளைஞரணி சார்பில் பயிற்சி முகாம்
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டியில் தி.மு.க., இளைஞரணி சார்பில் சமூக வலைதள பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்வம் வரவேற்றார். மாநில மாணவரணி துணை செயலாளர் அமுதரசன், பயிற்சியாளர் இளமாறன் இளைஞர் அணி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்தனர்.தி.மு.க., ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர் செயலாளர் சரவணன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா உட்பட ஆண்டிபட்டி தொகுதி அளவிலான இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.