உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பேராசிரியர்களுக்கு பயிற்சி

 பேராசிரியர்களுக்கு பயிற்சி

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் விருதுநகர்,தேனி ரோட்டரி கிளப், இதயம் நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான மேம்பாட்டுபயிற்சி வகுப்பு நடத்தினர். தேனி மேலப்பேட்டை உறவின் முறை பொருளாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கரூர் ரோட்டரி கிளப் நிர்வாகி மீனாசுப்பையா, விருதுநகர் ரோட்டரி கிளப் நிர்வாகி ரெங்கசாமி, தேனி ரோட்டரி கிளப் செயலாளர் சவுந்திரபாண்டியன் ஆகியோர், வாழ்க்கைக்கு மாணவர்களை தயார் படுத்துவது, பொது உரையாடல் திறனை மேம்படுத்துவது, பேச்சு திறன், சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்டவை பற்றி பேசினர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரோட்டரி கிளப் நிர்வாகிகள், பேராசிரியர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். கல்லுாரி துணைமுதல்வர் சத்யா தலைமையில் பயிற்சி வகுப்பை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ