உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்குவரத்து ஊழியர்கள் மறியல் :   152 பேர் கைது

போக்குவரத்து ஊழியர்கள் மறியல் :   152 பேர் கைது

தேனி: தேனியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.,) சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன்களை வழங்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக அரசு துவக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஊர்வலம், ரோடு மறியல் போராட்டம் நடந்தது. பங்களாமேட்டில் திண்டுக்கல் மண்டல பொதுச் செயலாளர் ராமநாதன் தலைமையில் துவங்கியது. துணைப் பொதுச் செயலாளர்கள் மணிகண்டன், கணேஷ்ராம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நலக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலசந்திரன் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் பேசினார். மறியலில் ஈடுபட்ட 152 பேர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ