மேலும் செய்திகள்
நுண் கலை வகுப்பு துவக்கம்
22-Jun-2025
தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் கனரா வங்கியின் 120வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு தேனி கனரா வங்கி, கல்லுாரி பசுமை சூழல் மையம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை துணைத் தலைவர் ஜீவகன் தலைமை வகித்தார். கல்லுாரியின் செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார்.கனரா வங்கி துணை பொது மேலாளர் இந்திரயா, உதவி பொது மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று கல்லுாரி வளாகத்தில் 200 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தனர். உறவின்முறை தலைவர் தர்மராஜன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் மரக்கன்றுகளை நடவு செய்தனர். கனரா வங்கி மேலாளர் அபிஜித், அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார், பசுமை மைய ஒருங்கிணைப்பாளர்கள் நாகரத்தினம், உடற்கல்வி இயக்குனர் சுந்தராஜன், செய்திருந்தனர்.
22-Jun-2025