உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பழங்குடியின பெண்ணுக்கு வனப்பகுதிக்குள் பிரசவம்

பழங்குடியின பெண்ணுக்கு வனப்பகுதிக்குள் பிரசவம்

கூடலுார்: தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள்ள வள்ளக்கடவு பச்சைக்காணம் வனப்பகுதியில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ்-பிந்து வசிக்கின்றனர். 9 மாத கர்ப்பிணியாக இருந்த பிந்து நேற்று வனப்பகுதிக்குள் தேன் மற்றும் உணவுப் பொருள்கள் எடுக்க கணவருடன் சென்றபோது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குமுளி சுகாதாரத் துறையினர் வனத்துறையுடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்று தாய் மற்றும் குழந்தையை வண்டிப்பெரியாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2.5 கிலோ எடையுள்ள குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை