உள்ளூர் செய்திகள்

காங்., அஞ்சலி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் வட்டார காங்., சார்பில் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வட்டார தலைவர் டாக்டர் ஹம்சா முகமது தலைமை வகித்தார். துணைத் தலைவர் முஜீப், பேரூராட்சி துணைத்தலைவர் அழகர் முன்னிலை வகித்தனர். தலைவர் மேகநாதன், நிர்வாகிகள் முருகன், பாலையா, மூக்கையா, முனியாண்டி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !