மேலும் செய்திகள்
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
31-Mar-2025
தேனி: காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி நகராட்சி அலுவலகம் அருகே இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமமூர்த்தி, கோவிந்தராஜ், கனகுபாண்டியன், சக்திவேல் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.தேனி நேருசிலை அருகே ஹிந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், தேனி நகர தலைவர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
31-Mar-2025