உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ, கடைகளை சேதப்படுத்திய படையப்பா

ஆட்டோ, கடைகளை சேதப்படுத்திய படையப்பா

மூணாறு: மூணாறு அருகே ஆட்டோ, நான்கு கடைகள் ஆகியவற்றை படையப்பா ஆண் காட்டு யானை சேதப்படுத்தியது. மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக நயமக்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டது. அப்பகுதியின் அருகே மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் இரவி குளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைலுக்கு நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு வந்த படையப்பா ரோட்டோரம் உள்ள நான்கு கடைகளை சேதப்படுத்தியது. அங்கு நிறுத்தி இருந்த ராஜமலையைச் சேர்ந்த மனோகரனின் ஆட்டோவையும் சேதப்படுத்தியது. யானை கடைகளை சேதப்படுத்தியபோது, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு விரட்டியதால் பொருட்கள் தப்பின. படையப்பா நடமாட்டத்தால் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் அச்சத்துடன் பயணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ