உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி அருகே புகையிலை பதுக்கிய இருவர் கைது

போடி அருகே புகையிலை பதுக்கிய இருவர் கைது

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் முத்தழகு 60. போடி வள்ளுவர் சிலை அருகே உள்ள இவரது பெட்டிக் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 100 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் போடி கிருஷ்ணா நகரை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 56, சட்டவிரோத விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்த போது 50 புகையிலை பாக்கெட் பண்டல்கள், 4 மசாலா புகையிலை பண்டல்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. போடி டவுன் போலீசார் முத்தழகு, வெங்கடேஸ்வரன் இருவரையும் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்பு உள்ள பண்டல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ