உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

தேனி : தேனி அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.தேனிமதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் திண்டுக்கல் குமுளி ரோட்டில் போடி நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள கண்மாய் பகுதியில் நின்றிருந்த நிவாஷ் என்பவரிடம் 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலில் மாரியம்மன் கோவில்பட்டி பெரியகருப்பர் தேவர் தெரு பிரசாத்தை கைது செய்து அவரிடமிருந்து 100கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவரும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா பதுக்கியதாக தெரிவித்தனர். போக்சோ வழக்கில் சிறையில் இருந்த போது, அங்கு போக்சோ வழக்கில் சிறையில் இருந்த கம்பம் கருநாக்கமுத்தனம்பட்டி ஆனந்த என்பவரும் கூட்டாக சேர்ந்த கஞ்சா வாங்கியதாக பிரசாத் போலீசாரிடம் தெரிவித்தார். மூவர் மீது வழக்கு பதிந்து பிரசாத், நிவாஷை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3ஆயிரம் மதிப்பிலான 140கிராம் கஞ்சா, ஒரு டூவீலரை கைப்பற்றி விசாரிக்கின்றர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை