போதையில் தகராறு: இருவர் கைது
பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை பெருமாள்புரம் இ.பி., காலனியைச் சேர்ந்தவர் குமார் 35. கார்த்திகை தீபத்தன்று உறவினர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 20, வீட்டின் முன் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது கருப்பசாமி சத்தமிட்டுள்ளார். இந்த முன் விரோதத்தால் மதுபோதையில் கருப்பசாமி இவரது நண்பர் ரவீன்குமார் 20. ஆகியோர் குமார் வீட்டிற்குள் சென்று, குமாரை அடித்து காயப்படுத்தினர். வடகரை போலீசார் கருப்பசாமி, ரவீன்குமாரை கைது செய்தனர்.