மேலும் செய்திகள்
சிறுவர்கள் மோதல் ஆள்மாறி நடந்த தாக்குதல்..
04-Sep-2025
மூணாறு : மூணாறு அருகே எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்து இருவர் பலத்த காயம் அடைந்தனர். வட்டவடையில் இருந்து மூணாறை நோக்கி பயணிகளுடன் வந்த ஜீப் நேற்று மாலை எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்தது. அதில் எல்லப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி 53, தமிழகம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஸ்வேதா 23, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மூணாறில் தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Sep-2025