நாய் கடித்ததில் இருவர் காயம்
போடி : போடியில் வெறிநாய் கடித்து இருவர் காமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போடி பகுதியில் அதிகளவில் தெரு நாய்களுடன் வெறிநோய் பாதித்த நாய்கள் சுற்றி திரிகின்றன. போடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகு 40. டி.வி.கே.கே., நகர் பகுதியை சேர்ந்தவர் அதிகாரி 50. இருவரும் போடி இரட்டை வாய்க்கால் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது ரோட்டில் நடந்து சென்ற நபர்களை கூட்டமாக தெருநாய்கள் துரத்தியது. அப்பகுதியில் நடந்து சென்ற அழகு, அதிகாரி இருவரையும் வெறிநாய் கை, கால்களில் கடித்துள்ளது. பலத்த காயம் அடைந்த இருவரும் போடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரியும் வெறி பிடித்த, நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.