உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரங்கள் விழுந்ததில் இருவர் பலி

மரங்கள் விழுந்ததில் இருவர் பலி

மூணாறு: அடிமாலி அருகே இரு வெவ்வேறு சம்பவங்களில் மரம் விழுந்தும், மரத்தின் மீது இருந்து விழுந்தும் இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர்.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதற்கு அடிமாலி அருகே வாளரா பகுதியில் ரோட்டோரம் ஆபத்தாக உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது. அப்பணியில் மூணாறு அருகே மறையூர் மேலாடியைச் சேர்ந்த சுரேஷ் குமார் 38, நேற்று காலை ஈடுபட்டார். அவர் மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டி அகற்ற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்தவரை சக தொழிலாளர்கள் தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்தார். வேறு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்து காயத்திற்கு சிகிச்சை பெற்று நேற்று பணிக்குச் சென்றவர் பலியானார் என்பது குறிப்பிடதக்கது. மற்றொரு விபத்தில் பலி: அடிமாலி அருகே குருசுபாறை பீச்சாடு பகுதியில் உள்ள தனியார் ஏலத்தோட்டத்தில் காஞ்சிரபள்ளியைச் சேர்ந்த பிஜூ 57, தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தபோது திடிரென மரம் சாய்ந்து பிஜூ மீது விழுந்தது. அதில் பலத்த காயமடைந்தவரை உடனிருந்தவர்கள் அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை