டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்
தேனி: போடி டொம்புச்சேரி அருகே 2 டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.டொம்புச்சேரி கூலித்தொழிலாளி ஆசீர்வாதம் 50. இவரும் அதே பகுதியை சேர்ந்த பெருமாளும் 47,டூவீலரில் நேற்று முன்தினம் மாலை டொம்புச்சேரியில் இருந்து உப்புக்கோட்டை நோக்கிச் சென்றனர்.டொம்புச்சியம்மன் கண்மாய் அருகே செல்லும் போது, அதேப்பகுதி ராஜ்குமார் 19, ஓட்டி வந்தடூவீலர் நேருக்குநேர் மோதி விபத்து நடந்தது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். டொம்புச்சேரி வட்டார சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஆசீர்வாதம் இறந்தார். இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆசீர்வாதத்தின் உறவினர்கள்,108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதற்காக ரோடு மறியலில் ஈடுபட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், கலைந்து சென்றனர். காயமடைந்த ராஜ்குமார், பெருமாள் தீவிர சிகிச்சைக்காக மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.