மேலும் செய்திகள்
கண் மூடி திறப்பதற்குள் அலுவலரின் டூவீலர் 'அபேஸ்'
04-Oct-2025
பாம்பு கடித்து பெண் பலி
05-Oct-2025
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் பெரியகுளம் - வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற டூ - வீலர் மோதி அதிலிருந்த இருவர் பலியாயினர். பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டி வீரநாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனபால், 23. தேனி தனியார் மில் தொழிலாளி. இவரது நண்பர் கெங்குவார்பட்டி தெற்கு தெரு சசிக்குமார், 27. இவரும் மில் தொழிலாளி தான். இருவரும் நேற்று முன்தினம் இரவு சில்வார்பட்டிக்கு கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இரவில் வத்தலக்குண்டு ரோட்டில் கெங்குவார்பட்டி நோக்கி சென்றனர். டூ - வீலரை தனபால் ஓட்டினார். சசிக்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். பெரியகுளம் வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு புல்லாக்கப்பட்டி அருகே டூ - வீலர் சென்றபோது, முன்னால் வேகமாக சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றது. இதனால் டூ - வீலர் லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இதில் டூ - வீலரை ஓட்டிய தனபால் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சசிக்குமார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம் கோட்டைக்காரன்பட்டி லாரி டிரைவர் ராஜேஷ், 31, மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
04-Oct-2025
05-Oct-2025