உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுார் நகராட்சியில் பூங்கா அமைக்க வலியுறுத்தல்

கூடலுார் நகராட்சியில் பூங்கா அமைக்க வலியுறுத்தல்

கூடலுார் : கூடலுாரில் நகராட்சியில் பூங்கா அமைக்க பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இந்நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இருந்த பூங்கா 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். மக்களின் எதிர்ப்பை மீறி பூங்காவின் ஒரு பகுதியில் நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. மீதமுள்ள இடத்தில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தன. அப்பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டதால் பூங்கா அமைப்பதற்கான நிதி வீணாகியது. மீதமுள்ள இடத்திலாவது பூங்கா அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் அப்பகுதியில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டது. பூங்காவில் இருந்த காந்தி சிலை மட்டுமே அங்கு உள்ளது.நகராட்சி பூங்கா இல்லாததால் முதியோர் ஓய்வெடுக்க இடமின்றி சிரமப்படுகின்றனர். நகராட்சி குப்பை கொட்டும் இடமான பெத்துக்குளத்தில் குப்பை கிடங்கை அகற்றி பூங்கா அமைக்க நகராட்சி அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.புதுராஜா, மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர், கூடலுார்: கூடலுார் நகராட்சியில் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான இட வசதி இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இருந்த பூங்கா மாற்றுப் பணிக்காக பயன்படுத்தும் போது வேறொரு இடத்தில் பூங்கா அமைத்து தருவதாக அப்போதய நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. பூங்கா அமைக்க நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு நகராட்சியிலும் பூங்கா இருப்பது கட்டாயம். இது நகராட்சி உட்கட்டமைப்பு விதிமுறைகளில் உள்ளது., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி