தண்ணீர் வசதி இல்லாத சிறுநீர் கழிப்பிடம்
பெரியகுளம் : பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக டெப்போ அருகே ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் தண்ணீர் வசதி, சுகாதாரம் இன்றி உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் அமைத்துள்ளது. இங்கு நான்கு கோப்பைகளுடன் தூய்மை செய்யும் தண்ணீர் குழாய் வசதிஉள்ளது. இதற்காக 500 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.வெகுதூரத்தில் பஸ்சை இயக்கி வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள், பொதுமக்கள் இந்த சிறுநீர் கழிப்பிடத்தை பயன்படுத்தினர்.துவக்கத்தில் நகராட்சி பணியாளர்கள் தொட்டியில் தண்ணீரை நிரப்பினர். தற்போது பணியாளர்கள் வருவதில்லை. தொட்டியில் தண்ணீர் இல்லாததால் சிறுநீர் கழிப்பிடம் நாறுகிறது. இதனால் யாரும் பயன்படுத்த முடியாமலும், சிலர் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் தொட்டியில் குழாய் இணைப்புக்கு வசதி இருந்தும் ஏனோ இணைப்பு கொடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக தொட்டிக்கு தணணீர் இணைப்பு வசதி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.