பயன்படுத்திய எண்ணெய் கண்காணிக்க பதிவேடு
தேனி : மாவட்டத்தில் ஓட்டல்கள், கடைகளில் பயன்படுத்திய எண்ணெய் விற்பனையை கண்காணிக்க பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தி உள்ளதாக உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சசிதீபா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஓட்டல்கள், உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் அரசு அனுமதி பெற்று நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க கூறி உள்ளோம். கடந்த மாதம் மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் சுமார் 4 டன் பெறப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் விற்பனையை கண்காணிக்க ஓட்டல்கள், ரோட்டோர உணவகங்களில் பதிவுவேடு வைக்க அறிவுறுத்தி உள்ளோம். பயன்படுத்திய எண்ணெய் வழங்குவது கண்டறியப்பட்டால்கடை காரர்களுக்கு அபராதம் விதித்து, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப்பொருட்கள் தரமற்ற முறையில் விற்பனை செய்தால் பொதுமக்கள் 04546 -252 549 என்ற தொலைபேசி எண்ணிலும், 94440 42322அலைபேசி எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமும் புகார் அளிக்கலாம் என்றார்.