உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாசனத்திற்கு நீர் திறப்பால் தொடர்ந்து குறைகிறது வைகை அணை நீர்மட்டம்

பாசனத்திற்கு நீர் திறப்பால் தொடர்ந்து குறைகிறது வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு நீர் வெளியேற்றம் தொடர்வதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக., 14 ல் 69.88 அடி வரை உயர்ந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. செப்., 18ல் அணை நீர்மட்டம் 68.83 அடியாக இருந்த நிலையில் பாசனத்திற்காக வினாடிக்கு 1330 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. பின் திறக்கப்பட்ட நீரின் அளவு செப்., 29 ல் வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு, அக்., 3ல் மீண்டும் வினாடிக்கு 1130 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கான நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. நீர் வரத்தை விட அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகம் இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக குறைகிறது. சில வாரங்களில் அணை நீர்மட்டம் 6 அடி குறைந்துள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 63.81 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 684 கன அடி. பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1130 கனஅடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ