உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை கல்குவாரி, ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை

வைகை கல்குவாரி, ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை

தேனி : தேனியில் வைகை கல்குவாரி, ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஓட்டலில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநில செயலாளர் முத்துகோவிந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். சங்க துணைத்தலைவர் தண்டபாணி, பொருளாளர் சின்னராஜா, நிர்வாகிகள் சன்னாசி, குமார், தாமோதரன், சந்தோஷ் ஜெயமணி, தியானேஷ்வரன், தமிழ்வேந்தன், அரசேந்திரன், நேரு, அறிவழகன், நவீன், செந்தில், அகிலேஷ், பிரபாகரன், விஜய் பல்ராமன், செந்தில்முருகன், சீனிவாசன், ராஜா, செல்வம், சின்னகருப்பு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தை தொடர்ந்து புதிய சிறு கனிம நில வரியை உள்ளடக்கிய புதிய விலைப்பட்டியில் வெளியிடப்பட்டது.புதிய விலையாக ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.5500, பி.சாண்ட் ரூ.6500, பவுடர் ரூ.4500, பல்வேறு ரக ஜல்லி கற்கள், சிப்ஸ் யூனிட் ரூ.4500, ஜி.எஸ்.பி., கிராவல் ரூ.2200 நிர்ணயம் செய்யப்பட்டள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ