உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகாசி விசாக பெருவிழா

வைகாசி விசாக பெருவிழா

போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். முருகனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட விசேஷ அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை