மேலும் செய்திகள்
டூவீலர் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
12-Aug-2025
உத்தமபாளையம்: உத்தமபாளையம் மெயின்பஜார் வீதியில் வசிப்பவர் அனந்தராமன் 62, இவர் உத்தமபாளையம் சின்னமனுார் தேசிய நெடுஞ்சாலையில் பென்னிகுக் நர்சரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சின்னமனூர் பைபாஸ் அருகில் உள்ள நர்சரியை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை நர்சரிக்கு சென்ற போது, நர்சரிக்குள் நிறுத்தியிருந்த பிக்கப் வேன், அங்கிருந்த இரும்பு தளவாட பொருட்கள், சிசிடிவி கேமரா மற்றும் அதன் கன்ட்ரோல் பேனல் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
12-Aug-2025