வாகனங்கள் மோதி விபத்து: 8 பேர் காயம்
பெரியகுளம்: கர்நாடகா, சித்திரதுர்கா மாவட்டம் எம்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மணிகண்டா 30. சபரிமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் சஞ்சய், ரங்கநாத், தினேஷ், புட்டுராசு உட்பட 6 பேர் சென்று கொண்டிருந்தனர். காரை மணிகண்டா ஓட்டினார். நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி பிரிவில் சபரிமலை சென்று திரும்பிய தர்மபுரி மாவட்டம் தோக்கப்பட்டி கார் மோதியது. இதில் இரு கார்களிலும் பயணம் செய்த கர்நாடகா டிரைவர் மணிகண்டா, தோக்கப்பட்டி டிரைவர் சதீஷ்குமார் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம், மணிகண்டா புகாரில் விபத்து ஏற்படுத்திய சதீஷ்குமார் மீது வழக்கு பதிய தயாரானார். மணிகண்டா பேசிய கன்னடம் மொழி எஸ்.ஐ.,க்கு தெரியவில்லை. இதனால் மணிகண்டா பெரியகுளம் தென்கரை மார்க்கெட் தெருவைச் சேர்ந்த நண்பர் மணிகண்டன் 52 உதவியுடன், தமிழில் மொழி மாற்றம் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்ய உதவினார்.