உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மணல் குவியலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

மணல் குவியலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

தேனி: தேனி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண் குவியலால் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர்.கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தேனி நகர் பகுதி வழியாக செல்கிறது. தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பங்களா மேடுவரை பல இடங்களில் ரோட்டின் இரு பகுதியிலும் மணல், ரோட்டின் பாதி பகுதியை மூடி உள்ளது. இந்த வழியாக டூவீலர்களில் செல்வோர் வாரி கீழே விழும் நிலை உள்ளது. முதியவர்கள் விழுந்து எழுகின்றனர். இந்த ரோடு மட்டும் இன்றி தேனி பெரியகுளம் ரோடு, கம்பம் ரோட்டிலும பல இடங்களில் மணல் மேவி உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. உயிர் சேதங்கள் ஏதேனும் ஏற்படும் முன் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மணல் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை