வேலம்மாள், டி.எம்.எச்.என்.யூ., பள்ளிகள் குறுவட்ட சாம்பியன்
தேனி: தேனி குறுவட்ட அளவிலான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. தேனி குறுவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 28 ல் துவங்கியது. தேனி நகர்பகுதியில் உள்ள பள்ளிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் போட்டிகள் மாணவர்கள், மாணவிகளுக்கு 14,17,19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நடந்தது. போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. போட்டிகளில் முதல் இரு இடங்களை வென்ற மாணவர்கள், அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகின. குழு போட்டிகளில் மாணவர்கள் பிரிவில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் பிரிவில் முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. தடகள போட்டிகளில் மாணவர், மாணவிகள் பிரிவில் தேனி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்றது.