உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடியரசு தின விழா மாநில போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை

குடியரசு தின விழா மாநில போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை

தேனி: தஞ்சையில் நடந்த மாநில குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் அக்.31 முதல் நவ.3 வரை குடியரசு தின விழா மாநில விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் தேனி வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் உயரம் தாண்டுதலில் பங்கேற்றனர். அதில் மாணவர் சித்தேஷ்வர் தங்கம் வென்றார். இவர் 400 மீ., ஓட்டப் போட்டியில் வெண்கலமும் வென்றார். 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில்மாணவர் ஆல்வின்சேஷன் 1500 மீ., ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார். மாணவர் பரத்வாஜ்தத்தி எட்டு வைத்து தாவுதல் போட்டியில் வெள்ளி பெற்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மாணவர் நிக்கில்தர்ஷன், ரூபன்சக்தி, பரத்வாஜ், சவுக்கான் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 400 மீ., தொடர்ஓட்டப் போட்டியில் நிக்கில்தர்ஷன், அபியுத்தன், சவுக்கான், ஆல்வின் சேஷன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். 19 வயதிற்கு உட்பட்ட உயரம் தாண்டுதல்போட்டியில் மாணவர் அசோக்குமார் வெள்ளி பதக்கம் வென்றார். மாநில போட்டியில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வேலம்மாள் பள்ளிக்குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம், இயக்குனர் சசிக்குமார், முதுநிலை முதல்வர் செல்வி,முதல்வர் ராஜா, உடற்கல்வி இயக்குனர்கள் சிவசாமி, பரமேஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் கோபிநாதன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !