மேலும் செய்திகள்
சுற்றுச்சுவர் இல்லாத கால்நடை மருந்தகம்
20-Mar-2025
மஞ்சள் மகிமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
24-Mar-2025
கம்பம் : தற்போது நிலவும் வெப்பத்திலிருந்து கோழிகளை பாதுகாக்க குடிக்கும் தண்ணீரில் குளுகோஸ் அல்லது மஞ்சள் பொடி கலந்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கும் என கால்நடை பராமரிப்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.கம்பம் கால்நடை மருந்தகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பத்திலிருந்து கோழிகள், குஞ்சுகளை பாதுகாக்க வேண்டும். கோழிகளுக்கு தீவனம் அதிகாலையில் கொடுக்க வேண்டும். பின் மாலையில் கொடுக்கலாம். பகலில் தீவனம் கொடுக்க கூடாது . பகலில் தண்ணீர் மட்டும் கொடுக்கலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் அடைத்து வைக்க வேண்டும். அடைத்து வைத்துள்ள இடத்தை சுற்றி ஈரச்சாக்கை சுற்றி வைக்கலாம்.இதனால் வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் இருக்கும். கோழிகள் குடிக்க வைக்கும் தண்ணீரில் ஒரு லிட்டருக்கு 10 கிராம் மஞ்சள் தூள் கலந்து கொடுக்கலாம். அல்லது 20 கிராம் குளுகோஸ் கலந்து குடிக்க கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கும். கோடை வெயிலால் பலியாவது தடுக்கப்படும். பகலில் மேய்ச்சலுக்கு வெளியில் விடாமல் அடைந்து வைத்து இருப்பது நல்லது. கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள், கோழி வளர்ப்பவர்கள் இந்த நடைமுறைகளை பின்பற்றி கோழிகளை கோடையின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கலாம். மேலும் விபரம் பெற விரும்பினால் கம்பம் கால்நடை மருந்தகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.
20-Mar-2025
24-Mar-2025