நவ.,23,24ல் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
தேனி: மாவட்டத்தில் உள்ள 563 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நாளை(நவ.,23), நாளை மறுநாள்( நவ.,24) வாக்காளர் பட்டியல் சுருக்கதிருத்த முகாம் நடக்கிறது. புதிதாக பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றிற்கு முகாமில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். முகாம்கள் காலை 9:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரை நடைபெறும். நேரில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் voters.eci.gov.inஎன்ற இணையதளம் அல்லது Voter helpline செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.