மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
17-Feb-2026
தேனி: மாவட்டத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பங்களா மேட்டில் துவங்கியது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு கலெக்டர் வழங்கினார். நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், தாசில்தார் சதீஸ்குமார், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார். ஊர்வலம் பெரியகுளம் ரோடு மேற்கு சந்தையில் நிறைவடைந்தது.
17-Feb-2026