கர்நாடகாவில் இருந்து வரும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
தேனி:சட்டசபை தேர்தலில் பயன்பாட்டிற்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கர்நாடகாவில் இருந்து மாவட்டம் வாரியாக அனுப்புவதற்காக பணிகளை தேர்தல் ஆணையம் துவங்க உள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. வி.வி.,பேட், ஓட்டு பதிவு இயந்திரம் ஆகியவை கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர உள்ளது. 5 முதல் 6 மாவட்டங்களை உள்ளடக்கி மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக இயந்திரங்கள் அனுப்பப்பட உள்ளன. தேர்தல் ஆணைய உத்தரவிற்கு பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை துவங்கும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.