குளவி கொட்டி 2 சுற்றுலா பயணிகள் மயக்கம்
மூணாறு: வட்டவடை, சிலந்தியாறு பகுதியில் கடந்தை குளவி கொட்டிய சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் சிலந்தியாறு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை நேற்று மதியம் சுற்றுலாப் பயணிகள் சிலர் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேறு பகுதியில் இருந்து கலைந்து வந்த கடந்தை குளவி சுற்றுலா பயணிகளை கொட்டியது. அவை தேனீக்களை விட மிகவும் ஆபத்தானவை என்பதால், ஆலப்புழாவைச் சேர்ந்த ஆதித்யா 22, கொல்லத்தைச் சேர்ந்த சஞ்ஜித் 21, ஆகியோர் சுய நினைவை இழந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.