உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சி, பேரூராட்சிகளில் கழிவு நீர் மேலாண்மை தேவை

நகராட்சி, பேரூராட்சிகளில் கழிவு நீர் மேலாண்மை தேவை

கம்பம்: நகராட்சி,பேரூராட்சிகள் சாக்கடை கழிவு நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, விவசாயத்திற்கு வழங்க அறிமுகம் செய்து இதற்கென நகராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது. உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும் பல லட்சம் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. நகராட்சி, பேரூராட்சிகளில் முல்லைப்பெரியாற்றில் சாக்கடை கழிவு நீர் கலக்கும் இடத்தில் ஒரு தொட்டியை மட்டும் கட்டினர். சுத்திகரிப்பு செய்வதற்கான எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை.வழக்கம் போல சாக்கடை கழிவு நீர் முல்லைப் பெரியாற்றிலும், கம்பத்தில் வீரப்ப நாயக்கன் குளத்திலும் கலந்து மாசுபடுகிறது. இத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதுடன், தனி மனித ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் சேகரமாகும் சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, மறு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி